பிரசவத்தின்போது மயக்கத்துக்காக போடப்படும் ஊசிகள் வைத்து சிறுமியை பல மாதங்களாக கற்பழித்துள்ளனர். சாதாரண அபார்ட்மெண்ட் லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் கைக்கு சென்றது எப்படி? அதுமட்டுமல்லாமல் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் இத்தகைய மயக்க ஊசியை கொடுத்தது எப்படி? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வயது வாய் பேச முடியாத சிறுமியை கடந்த 7 மாதங்களாக, மயக்க ஊசி போட்டும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு பல்வேறு அதிர்ச்சித்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள ஒரு வீட்டில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்த அந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது தாய் அவரை பரிசோதித்தார். அப்போது அவர் பல மாதங்களாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த சிறுமியிடம் பேசி யார் யார் இதில் ஈடுபட்டது என விசாரித்த பெற்றோர் பெரும் அதிர்ச்சியானார்கள். தனது வாய் பேசமுடியாத குழந்தையை இப்படி சீரழிதுள்ளார்களே என கதறிய அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.  அதில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கவாலாளி, பிளம்பர், தண்ணீர்கேன் போடுபவர் என 15 பேரை அடையாளம் காட்டினார் அந்த சிறுமி.

மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 7 மாதங்களாக நாள்தோறும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்தும் மயக்க ஊசி போட்டும், போதை மருந்து கொடுத்தும் அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியுள்ளன அந்த காம வெறிபிடித்த மிருகங்கள்.

அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியின் ஆடைகளை களைந்து செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காட்டி கத்தி முனையில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். சிறுமியை தூக்கி சென்று காம வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ள  இவர்கள் அந்த வாய் பேச முடியாத பிஞ்சிக்கு வலி தெரியக் கூடாது என்பதற்காக பிரசவத்துக்கு போடும் ஊசியை பயன்படுத்தியுள்ளதாக திடுக் தகவல்கள் கிடைத்தன.

பிரிஸ்கிரிப்ஷன் கொண்டு வாங்கும் இந்த ஊசியானது சாதாரண வேலை செய்யும் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? அப்படியென்றால் இந்த விவகாரத்தில் பெரிய டீமே செயல்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் மருந்து கடைகளுக்கு ஏதேனும் தொடர்பா உள்ளதா? சாதாரண ஸ்லீப்பிங் மாத்திரையை கூட டாக்டர்  பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் கொடுக்க மறுக்கும் மெடிக்கலில் இத்தகைய மயக்க ஊசியை கொடுத்தது எப்படி?  அதுமட்டுமல்லாமல், இவர்கள் போதை ஊசியையும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.