தமிழகத்திலும் வந்துவிட்டது மதுபான ஏடிஎம்.. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது..
தமிழகத்தில் தானியங்கி மதுபானம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்படுவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் சில்லறையாகவும் மொத்தமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. அதிலும் பண்டிகைகள் அல்லது தொடர் விடுமுறை வந்துவிட்டால் டாஸ்மாக் கடைகள் புதிய வசூல் சாதனையையும் படைத்து வருகின்றன. எனினும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையிதமிழ்நாட்டில் 4 இடங்களில் தானியங்கி மதுபானம் வழங்கும் இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, டாஸ்மாக் மதுபான கடைகளில் தானியங்கி மதுபான எந்திரம் நிறுவ உள்ளதாக தகவல் வெளியானது. இதன் மூலம் குடிமகன்கள் எப்பொது வேண்டுமானாலும் நேரடியாக சென்று மதுவை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
ஏற்கனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இந்த மதுபான ஏஎடிஎம்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க : கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை.. 48 மணி நேரம் தான் டைம்.. அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்..!
அதில், “ அரசு சார்பில் 101 மால்களில் சில்லறை மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 4 மால்களில் மட்டும் தானியங்கி எந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் அது 24 மணி நேரமும் திறந்திருக்காது. டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே இதுவும் திறந்திருக்கும். கடைக்கு வெளியே இந்த இயந்திரம் இருக்காது. கடைக்கு உள்ளே தான் இருக்கும். மேலும் இந்த தானியங்கி மதுபான இயந்திரத்தை பொதுமக்கள் இயக்க முடியாது. கடை பொறுப்பாளர் மட்டுமே இந்த இயந்திரத்தை இயக்க முடியும். சில்லறை விற்பனையில் கூடுதல் விற்பனைக்கு மதுபானம் விற்கப்படுவதை தடுக்கவே இந்த இயந்திரம் அமைக்கப்பட உள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விந்தணு தானம் செய்யக்கூடாது.. 550 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நபருக்கு நீதிமன்றம் தடை..