போக்கு காட்டும் சிறுத்தை.. தஞ்சையில் இருந்து U-TURN அடித்து மயிலாடுதுறையில் ரீ என்டரி!

கூண்டுகளில் சிறுத்தை சிக்காத நிலையில் கண்காணிப்பு கேமராக்களில்  சிறுத்தையின் உருவம் பதிவாகாத நிலையில்  தேடுதல் வேட்டையின் அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தின் நண்டலார் பகுதியில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

leopard made a U-TURN from Thanjavur and re-entered Mayiladuthurai tvk

வனத்துறையினர் சிறுத்தையை தஞ்சை மாவட்டத்தில்  தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் யூ டர்ன் அடித்து மீண்டும் மயிலாடுதுறைக்கு இடம் பெயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை காவிரி பழங்காவிரி மஞ்சள் ஆறு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனை பிடிக்க கூண்டுகள் வைத்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சி வாய் பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்தது.

இதையும் படிங்க: நெல்லை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தாகிறதா? என்ன காரணம்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் நண்டல ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் பொருத்தப்பட்டிருந்த கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை காஞ்சி வாய், கருப்பூர், பேராவூர் ஆகிய பகுதிகளில் நண்டலாறு மற்றும் மஞ்சுளா ஆற்றின் கரை பகுதியில் அமைத்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கூண்டுகளில் சிறுத்தை சிக்காத நிலையில் கண்காணிப்பு கேமராக்களில்  சிறுத்தையின் உருவம் பதிவாகாத நிலையில்  தேடுதல் வேட்டையின் அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தின் நண்டலார் பகுதியில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

சிறுத்தை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அருகில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் நண்டலாறு வீரசோழன் ஆற்று பகுதிகளில் இருக்கலாம் என்று வனத்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று இரவு மயிலாடுதுறை அடுத்த புறநகர் பகுதியான அடியமங்கலம் ரயில்வே லைனில், செயல்படும் ஜல்லி கலவை தயார் செய்யும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் சாப்பிட்டுவிட்டு ரயில்வே லைனில் வரும் பொழுது ஒரு தூங்கு மூஞ்சி மரத்தில் உட்கார்ந்து இருந்த சிறுத்தை மரக்கிளை முறிந்து தாவி குதித்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் நுழைந்ததை பார்த்துள்ளனர். 

இதையும் படிங்க:  அப்பாடா.. வெயிலுக்கு குட்பாய்.. இந்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்காம்.. வானிலை மையம் சொன்ன தகவல்!

தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இரவில் படம்பிடிக்கும் தெர்மல் ட்ரோன் மூலமாக அப்பகுதியில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இடத்தில் சிறுத்தையின் கால் தடம் போன்று பதிவுகள் காணப்படும் நிலையில் காலையில் மீண்டும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் வனத்துறை ஈடுபட உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தை விட்டு சிறுத்தை சென்று விட்டதாக பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் யு டர்ன் அடித்து மயிலாடுதுறைக்கு சிறுத்தை திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios