சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம்... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்...!
வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி அடுத்த ஆம்பூர் பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறிவந்தனர். நேற்று ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் கன்றுகுட்டி, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வயலுக்கு பாரதி (வயது 45). இவரது தங்கை அலுமேலு (42). ஆகிய 2 பேரும் சென்றனர். அப்போது ஏரிக்கரை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென அலுமேல் மீது பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி பாரதி சிறுத்தையை விரட்டினார். அவரையும் சிறுத்தை தாக்கியது.
அப்போது அந்த வழியாக வந்த இளைஞரையும் சிறுத்தை கையில் கடித்தது. இதனையடுத்து பொதமக்களை கண்டதும் சிறத்தை கரும்பு தோட்டத்திற்கு சென்று மறைந்தது. சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனே போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்ட்டது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுத்தையை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர்.
கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் தீ வைத்தனர். பின்னர் சிறுத்தை நோக்கி கற்களை வீசிய போது திடீரென கூட்டத்திற்குள் சிறுத்தை புகுந்தது. இதில் 2 பேரை கடித்து குதறியது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆந்திர பகுதியான வீராணமலை பகுதியில் இருந்து வழி தவறி சிறுத்தை ஊருக்குள் வந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.