அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராகாத நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் நேற்று கைதானதையடுத்து இன்று பெங்களூர் நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளது.

சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ கடந்த 2009 ஆம் ஆண்டு தனியார் தொலைகாட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தான் வெளியிட்டார் என செய்திகள் பரவின. அவரும் அந்த வீடியோ உண்மைதான் என வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து லெலின் கருப்பன் மீது நித்தியானந்தாவின் சீடர் சுப்ரியா அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

ஆனால் இந்த அவதூறு வழக்கில் லெலின் கருப்பன் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்ய கோரி பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று சென்னையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அதைதொடர்ந்து லெலின் கருப்பனை பெங்களூர் நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளது.