சென்னையில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை கடந்த  7 மாதங்களாக  கற்பழித்து பாலியல் வன்முறை செய்துவந்த 17 பாலியல் குற்றவாளிகளுக்காக வக்கீல்கள் ஆஜராக கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செவித்திறன் பாதித்த 7-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் விளையாட்டு என்ற பெயரில் கடந்த 7 மாதங்களாக மயக்க ஊசி மற்றும் போதை மாத்திரை கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த 18 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில்,பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.அந்த போலீசார் புகாரை கண்டதும் அதிர்ச்சியடைந்தர்.

அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என தகவல் தெரிவிக்கின்றன. 

இந்த சிறுமியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், வாயிற்காவலர் என மற்றவர்களுக்கும் தெரியவர அவர்களும் சிறுமியைபாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்.

இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நேற்று சிறையில் அடைத்தனர்.பின்னர் இவர்களை இன்று நீதி மன்ற வளாகத்திற்குள் அழைத்து வந்த போது,  வழக்கறிஞர்கள் அவர்களுக்கு சரமாரியாக அடி உதை கொடுத்து உள்ளனர்

இந்த 17  பேரும் அமர்ந்து  இருந்த போலிஸ் வேனை  சூழ்ந்துக்கொண்ட வக்கீல்கள்  அவர்களுக்கு அடி உதை கொடுத்து உள்ளனர்.சாதாரண சிறுமியை இப்படி செய்து உள்ளனரே என்று, கொதித்து எழுந்த வக்கீல்கள் அவர்களுக்கு அடி கொடுத்து வெளுத்தி வாங்கி உள்ளனர்

இந்த 17 போரையும் வரும் 31 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு  நிலவியது.

இந்த பரபரப்பை அடித்து, இவ்வழக்கில், 17 பேருக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராக கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். இதை மீறி, யாராவது 17 பேருக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரிக்கைவிடுத்தார்.