Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு விவகாரம் - அவசர சட்ட முன்வரைவு ஏற்பு!!

law ordinance accepted
law ordinance accepted
Author
First Published Aug 14, 2017, 3:05 PM IST


தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், டெல்லி சென்ற தமிழக சுகாதர துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக சட்ட முன் வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவு மற்றும் கூடுதல் ஆவணங்களை சுகாதாரத்துறை , மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் சட்ட அமைச்சத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த 3 அமைச்சகங்களும் அவசர சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அவசர சட்ட முன்வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios