Asianet News TamilAsianet News Tamil

OOTY TOUR : ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.! என்ன தெரியுமா.?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடும் வெயிலுக்குப் பிறகு, கனமழை காரணமாக ஊட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

Landslide affected Ooty Hill train services resumed KAK
Author
First Published Sep 1, 2024, 12:39 PM IST | Last Updated Sep 1, 2024, 12:39 PM IST

வெயில் தாக்கம்- ஊட்டிக்கு படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தில் வெயிலின் தாக்கமமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மத்தியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு வெயிலின் தாக்கமானது எப்போதும் இல்லாத வகையில் அனல் காற்றோடு வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் இருந்து வெளியே வரவே அச்சப்பட்டனர். குளுமையான இடங்களுக்கு தேடி படையெடுத்தனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனையடுத்து இ பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்தது. இதனையடுத்து இ பாஸ் பெற்றவர்கள் மட்டுமே ஊருக்குள் செல்ல முடியும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பள்ளி விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Landslide affected Ooty Hill train services resumed KAK

ஊட்டி மலை ரயில் சேவை

இந்தநிலையில் ஆகஸ்ட் மாதமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஊட்சிக்கு செல்ல திட்டமிட்ட பயணிகளுக்கு மலை ரயில் ஏமாற்றத்தை கொடுத்தது. கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக ஊட்டியில் பல இடங்களில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மலை ரயில் சேவையும் முடங்கியது.  கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நிறுத்தப்பட்ட மலை ரயில் சேவையால் உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மலை ரயில் மூலம் இயற்கையை ரசிக்க ஆவலோடு சென்ற பயணிகள் பயணிக்க முடியாத நிலை உருவானது. இதனையடுத்து மலை ரயில் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பராமரிப்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. அந்த வகையில் உதகை செல்லும் பயணிகள் மலை ரயிலில் சென்று இயற்கையை ரசிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தது.! எவ்வளவு .?எந்த எந்த டோல்கேட் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios