காஞ்சீபுரம் அருகே தொழிலாளி, பனை மட்டையால் அடித்தேக் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஆரியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (46). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் திடீரென அவர் ஓட்டி வந்த ஆட்டை கம்பால் அடித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் பனை மட்டையால் ரவியின் தலையில் ஓங்கி அடித்ததாக தெரிகிறது.
இதில் ரவி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக ரவியை சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா காவல்துறை இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்.
