அதிமுக, திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் தவெக பலமடையும் என தவெக திட்டமிடப்பட்டு வருகிறது.

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், ஜேசிடி.பிரபாகரன் போன்றோர் இணைந்ததை அடுத்து மேலும் சில திமுக பிரமுகர்கள், முன்னாள் அ.தி.மு.க, எம்எல்ஏ ஒருவரும் விரைவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையோடு அவர் அதிமுகவை சேர்ந்த பலரையும் விஜய் கட்சியில் இணைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரது கட்சிகளையும் தவெக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஒருவேளை அவர்கள் இருவரும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தால் அவர்களது கட்சியினர் பலரும் தவெகவில் இணையும் முடிவில் இருக்கிறனர். ஓ.பன்னீர்செல்வத்தின் வலது கரம், இடது காலமாக திகழும் வைத்திலிங்கம், வெல்லம் வண்டி நடராஜன் ஆகிய இருவரும் தமிழக கட்சி கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளவர்கள் என 10 முக்கிய தலைவர்களை தவெகவில் இணைப்பதற்கான பணிகளை செங்கோட்டையன் செய்து வருகிறார். தற்போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி தவெகவில் இணைகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனும் தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்களை தவெக குறிவைத்துள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக வணிகர் அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் தவெகவில் இணைய உள்ளார். அதேபோல் ஒட்டன்சத்திரம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார். முன்னாள் புதுச்சேரி காவல்துறை ஐஜி ராமச்சந்திரன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதேபோல் அதிமுக, திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் தவெக பலமடையும் என தவெக திட்டமிடப்பட்டு வருகிறது. அத்தோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமான நான்கு முன்னாள் அமைச்சர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது. இதில் இரண்டு பேர் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் சென்னையில் சேர்ந்தவர். மற்றொருவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றம் தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் கார்த்திகேயன், தீபம் ஏற்றுவதில் தமிழக அரசு, அரசியல் செய்வதால், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைணந்தார். த.வெ.க.,வில் இணைந்த, திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க., துணைச் செயலர் கமாண்டோ பாஸ்கரன், நேற்று முன்தினம் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார்.