Asianet News TamilAsianet News Tamil

குவைத் தீ விபத்து: அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

குவைத் தீ விபத்து தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

Kuwait fire accident Non Resident Tamils Welfare Department helpline number announced smp
Author
First Published Jun 12, 2024, 7:58 PM IST

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் கேரள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமுக்கு சொந்தமான NBTC குழுமத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்தில் 43 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 30 பேர் இந்தியர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து தொடர்பான உதவிக்கு 965-65505246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. தீ விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை இணையமைச்சர் குவைத் விரைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழிசைக்கு ஆதரவாக களத்தில் குதித்த கேரள காங்கிரஸ்: அமித் ஷாவுக்கு கடும் கண்டனம்!

முதல்வரின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிற்குள் - +91 1800 309 3793 என்ற எண்ணையும், வெளிநாடு - +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios