kundrathur inspector acted as hero in real life and catched

திருடர்களை பிடிப்பதில் காவலர்களுக்கு பெரும் சவால் தான்....காவலர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே... ஒரு காவலர் எப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பதை காவல் நிலையம் சென்று பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.....

காவல் நிலையம் அனுபவம் அல்லாதவர்களுக்கு ஒரு போலிஸ்காரர் எப்படி செயல்படுவார் என்பதை படத்தில் தான் பார்க்க முடியும்...

கடந்த 14 ஆம் தேதியன்று நடந்த சுவாரஸ்யமான சம்பவம் உங்கள் பார்வைக்கு.....

"பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அஷ்டலட்சுமி பிளாட் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மல்லிகா (வயது 40). இவர் அன்று இரவு காட்டுப்பாக்கம் மெயின் ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்துள்ளார்

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா கூச்சலிட்டார். உடனே அங்கு பொதுமக்கள் திரண்டனர்.

அப்போது அந்த வழியாக குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் போலிஸ் வேனில் சென்றுள்ளார்.அந்த கொள்ளையன் அதிவேகமாக வண்டி ஓட்டியதை பார்த்த சார்லஸ்,தான் சென்ற போலிஸ் வேனை வேகமாக இயக்கி,கொள்ளையன் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி நின்றுள்ளார்.

இப்போதுதான் அந்த சீன்

இன்ஸ்பெக்டர் சார்லசை பார்த்த கொள்ளையன், தன்னுடைய ஹெல்மெட்டால் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு ஓடி உள்ளார். விடுவாரா இன்ஸ்பெக்டர் சார்லஸ்....

"இன்ஸ்பெக்டர் சார்லஸ் விரட்டி வருவதை பார்த்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினார்கள். அப்போது ஒருவனை இன்ஸ்பெக்டர் சார்லஸ் துரத்தி பிடித்தார்.

ஒரு கட்டத்தில் கொள்ளையன் கத்தியை எடுத்து இன்ஸ்பெக்டரை குத்த முயன்று உள்ளான்.இதனை சாதுர்த்தியமாக கையாண்ட சார்லஸ் கொள்ளையனை வசமாக மடக்கி பிடித்து கீழே தள்ளி, சினிமாவில் வருவது போலவே கொள்ளையன் வைத்திருந்த கத்தியை பிடுங்கி விட்டுள்ளார் ஒரு பளார்....பின்னர் கொள்ளையனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை பொதுமக்கள் கொஞ்சம் கொடுக்க ...மீதத்தை போலீஸ்காரர்களே கொடுத்து உள்ளனர்.

யார் இந்த கொள்ளையன் ?

விசாரணையில் அவனது பெயர் இர்பான் (வயது 35) என்றும், சென்னை பட்டாளம் ஷேக் மெய்தீன் தெருவை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது. தப்பி ஓடிய அவனது கூட்டாளி பெயர் தெரியவில்லை.

மல்லிகாவிடம் நகை பறிப்பதற்கு முன்பு அம்பத்தூர் மற்றும் அய்யப்பன் தாங்கல் பகுதியில் வழிப்பறி செய்துள்ளனர்.

கைதான கொள்ளையனிடம் இருந்து 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. துப்பாக்கி முனையில் கொள்ளையனை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர் சார்லசை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

இந்த மரியாதைக்குரிய ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.இன்ஸ்பெக்டர் சார்லஸ் சொல்ல சொல்ல வேனை மிக விரைவாக சாதுர்த்தியமாக ஒட்டி வந்த போலீசாருக்கும் பாராட்டுகள் குவிகின்றது....