kumbaabishegam 4 types
நான்கு வகை கும்பாபிஷேகம்.....
புதிய கோவில் கட்டிய உடனோ அல்லது கோவிலை புனரமைத்தாலோ கும்பாபிஷேகம் செய்வது வழக்கம்.
கும்பாபி ஷேகம் என்றாலே,சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஆவலாக வருவார்கள்
காரணம் கும்பாபி ஷேகத்தின் போது, தெளிக்கப்படும் தீர்த்தம் நம் மீது பட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதே...அதுமட்டும் அல்ல பாவங்களும் பறந்து விடும் என கூறுவது உண்டு....
கும்பாபி ஷேகம் நான்கு வகையாக பார்க்கப்படுகிறது.

கும்பாபிஷேகம் என்பது ஆவர்த்தம், அனுவர்த்தம், புனராவர்த்தம் மற்றும் அந்தரிதம் என்று நான்கு பொதுவான வகைகளாக உள்ளது.
புதிதாக கோவிலை நிர்மாணம் செய்து, அங்கே புதிய கடவுள் சிலைகளை அமைத்து செய்யப்படுவது ‘ஆவர்த்தம்’ எனப்படும்.
கோவில் அல்லது தெய்வ மூர்த்தங்கள் ஆகியவை வெள்ளம் அல்லது இதர இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, அவற்றை மீண்டும் சீரமைப்பது ‘அனுவர்த்தம்’ என்று சொல்லப்படும்
குறிப்பிட்ட காலம் கடந்த நிலையில் ஆலயத்தின் பழுதுகளை சரி செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிக்கும் முறை ‘புனராவர்த்தம்’ ஆகும்.
கள்வர்களால் தெய்வ சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு, அவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்யும் முறைக்கு ‘அந்தரிதம்’ என்று பெயர்.
மேற்குறிப்பட்டவற்றின் அடிப்படையில் தான் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
