Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவிக்கு தாலி; 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் ஹீரோயின்;சினிமாவை ஒழிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

முன்னனி நடிகையான நயன்தாரா திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்திருப்பது சமூக வலை தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். 
 

Krishnasamy has insisted that cinema should be abolished as school students are degenerate
Author
First Published Oct 12, 2022, 9:20 AM IST

பள்ளி மாணவிக்கு திருமணம்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, புகை பிடிப்பது வீடியோக்கள் வெளியான நிலையில், பள்ளி மாணவிக்கு பேருந்து நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சீருடையில் இருந்த மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்  பஸ் ஸ்டாபில் வைத்து தாலி கட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குபலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரையும், தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

72 மணிநேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது... மாஸ் காட்டும் தமிழக காவல்துறை!!

Krishnasamy has insisted that cinema should be abolished as school students are degenerate

4 மாதத்தில் குழந்தை பெற்றடுத்த நடிகை

சமூக வலை தளத்தின் வளர்ச்சியே இது போன்ற மோசமான செயல்களுக்கு அடித்தளமாக இருப்பதாக சமூக ஆர்வர்கள் விமர்சித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு தீயதை தள்ளி வைக்க வேண்டும் என்றே கூறிவருகின்றனர். இந்தநிலையில் சினிமா படங்களில் வரும் காட்சிகள், யூடியூப்  போன்றவற்றில் வரும் வீடியோவை பார்த்து சிறு குழந்தைகள் கூட் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணாசாமி சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம்.!திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின்.! தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள் - கலாச்சாரம் - பண்பாடு.! சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.! என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. முகநூல் வீடியோ வெளியிட்ட நபரின் நிலையை பார்த்தீங்களா.!

Follow Us:
Download App:
  • android
  • ios