Asianet News TamilAsianet News Tamil

72 மணிநேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது... மாஸ் காட்டும் தமிழக காவல்துறை!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

tn police arrested more than three thousand rowdies in 72 hours
Author
First Published Oct 11, 2022, 10:51 PM IST

தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து செய்வோர், ஏ.பிளஸ் கேட்டகிரியில் உள்ள தாதாக்கள், ரவுடிகள், பி மற்றும் பி. பிளஸ் ரவுடிகள் மற்றும் சி பிரிவு ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஆசைவார்த்தை கூறி சிறுவனுடன் உல்லாசம்… கர்ப்பமான கல்லூரி மாணவி போக்சோவில் கைது!!

அந்த வகையில் தென் மாவட்டங்களில் பிரபல தாதாவாக வலம் வந்த ராக்கெட் ராஜா உள்ளிட்ட ரவுடிகள் பலர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என 9 மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் 37 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 72 மணி நேரத்தில் நடந்து முடிந்த மின்னல் ரவுடி வேட்டையில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வயிற்று வலிக்கு ஸ்கேன் எடுக்க போன பெண்.. ரிப்போர்ட் பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சி - அச்சச்சோ.!

கைது செய்யப்பட்ட ரவுடிகளில் பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த 489 ரவுடிகள் ஆவார்கள். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 216 ரவுடிகள் என மொத்தம் 705 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,390 ரவுடிகள் காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள். இவர்களிடம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் முன்னிலையில் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி குற்றங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ரவுடிகள் 6 மாதகாலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios