சேலம் அருகே சிறுவனை திருமணம் செய்துக்கொண்டு அவரால் கர்ப் கர்ப்பமான கல்லூரி மாணவியை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

சேலம் அருகே சிறுவனை திருமணம் செய்துக்கொண்டு அவரால் கர்ப் கர்ப்பமான கல்லூரி மாணவியை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த 18 வயது மாணவர் ஒருவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவரை தேடி வந்தனர். இதனிடையே மாணவரின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: வயிற்று வலிக்கு ஸ்கேன் எடுக்க போன பெண்.. ரிப்போர்ட் பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சி - அச்சச்சோ.!

அதில், தங்களது மகனை காணவில்லை என்றும் மகனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் அந்த மாணவர் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் அவருடன் இருந்த இளம்பெண்ணையும் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அந்த 21 வயதான பெண் சூர்யாவுடன் படித்ததும், இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: திருமணமான பெண்ணை தூக்கிச் சென்று, தனி அறையில் கட்டிவைத்து பலமணிநேரம் உல்லாசம்.. மருத்துவமனையில் சிகிச்சை.

இதையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்ததும் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி அந்த மாணவனை மாணவி கடத்தி சென்று வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்தது. மாணவனுக்கு 18 வயது பூர்த்தி அடையாத நிலையில் சிறுவனை கடத்திச்சென்று திருமணம் செய்த அந்த மாணவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அவர்களின் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.