Asianet News TamilAsianet News Tamil

Omicron : நோ..நோ..! தடுப்பூசி போடவில்லையென்றால் இதெற்கெல்லாம் தடை..! - இன்று முதல் அமல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

Krishnagiri Collector Press Meet
Author
Krishnagiri, First Published Dec 1, 2021, 4:50 PM IST

Omicron : உலகம் முழுவதும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் புது வைரஸ் தொற்று,  முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இதற்கு ஒமைக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. இந்த உருமாறிய புதிய கோரோனா தொற்று பரவலை தடுக்க, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

கடந்த 2 தினங்களுக்கு முன்பு , தலைமைசெயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய வகை, உருமாறிய ஒமைக்ரான் என்ற கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், ஆலோசனை கூட்டம் நடத்தினார். மேலும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கையும் அனுப்பினார். இதன்மூலம் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும் எனவும் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்டறிதல், பரிசோதனை மேற்கொள்ளுதல் , கண்காணித்தல் , தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றவற்றை பின்பற்றுமாறு வழிக்காட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னும் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஒரு தவணை தடுப்பூசிக்கூட செலுத்திக்கொள்ளவில்லை என்றும், அதனால் தடுப்பூசி செல்லுத்தக்கொள்ளாத நபர்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் திரையரங்கு, வணிக வளாகங்கள்,சுற்றுலா மற்றும் வழிப்பாட்டு தலங்கள் என பொது இடங்களுக்கு செல்லவும் அனுமதியில்லை என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் முக்கியச் சாலைகளில் வாகனசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

மேலும் தடையை மீறி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் பொதுஇடங்களுக்கு வருவோர் மீது அபராதம் போன்ற கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமலுக்கு வந்துள்ள புது உத்தரவு மூலம் விரைவில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதித்த 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகளை அதிகரித்துவரும் நிலையில் , அந்த 12 நாடுகளை அதி ஆபத்து கொண்டவையாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வரையறுத்துள்ளது. பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்,தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா ,மொரிசியஸ்,நியூசிலாந்து, சிம்பாப்வே, சிங்கபூர், ஹாங்காங் ,இஸ்ரேல்
 ஆகிய 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios