கோவையில் பிராங்க் வீடியோ எடுத்த பிரபல யூ டியுப் சேனல் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள வரை அனைவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூ டியுப் என தங்களது நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பெரும்பாலான மக்கள் யூடியூபில் சில சேனல்களை பின் தொடர்ந்து அதில் நிறைய வேடிக்கையான, நகைச்சுவையான மற்றும் பிராங்க் போன்ற வீடியோக்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பிராங்க் வீடியோக்களை பதிவிடும் யூ டியுப் சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் பிராங்க் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இன்றி யூடியூபில் பதிவேற்றினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாககோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..Cyrus Mistry : டாடாவின் வாரிசு முதல் டாடா சன்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தவர் வரை.! யார் இந்த சைரஸ் மிஸ்திரி ?

அதில், ‘பொது மக்கள் நடமாடடும் இடங்களாகிய பூங்காக்கள், நடைப்பயிற்சி மைதானங்கள் போன்ற பல இடங்களில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு அவற்றை வீடியோவாக பதிவிடுகின்றனர். இதனை யூட்யூப்பில் வெளியிட்டு அதனை கொண்டு பணம் சம்பாதித்தும் வருகின்றனர். 

சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம் சுழிக்கும் வகையில் எதிர்பாலினத்தவரை தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடக்கின்றனர். இதனால் பொதுமக்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வீடியோ எடுத்து தனிநபரின் அனுமதியின்றியும் அவருக்கு தெரியாமலும் யூட்யூப் சேனல்களில் வெளியிடுகின்றனது. இது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது. 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

மேலும் இது அவர்கள் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது.எனவே ப்ராங்க் வீடியோக்கள் அல்லது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சேனலும் முடக்கப்படும். மேலும் புகார் அளிக்கப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் இன்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளிலும் வழக்குப்பதியப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..அரசியல் பிளானும் இருக்கும் போலயே - ஜெயிலர் டூ அரசியல்.!