கொல்லி மலை சித்தர் பற்றிய ஒரு உண்மை கதை தான் இது... தமிழகத்தில் பிறந்த ஒருவர் அமெரிக்காவில் விமான படை அதிகாரியாக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்து போய் உள்ளது ஆனால் வேலை சுமை மற்றும் ஒரு சில காரணத்தால், உடல்நிலை மீது அவர் கவனம் செலுத்தவில்லை. 

பின் எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு அவருக்கு வயிறு வலி இருந்துள்ளது. சாப்பிட முடியவில்லை. மருத்துவரை அணுகியபோது காத்திருந்தது அதிர்ச்சி! அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் உள்ளது தெரியவந்தது. மூன்றாவது ஸ்டேஜில் புற்று நோய் இருந்ததால் காப்பாற்றுவது கடினம் என கூறி அமெரிக்க மருத்துவர்களே கை விட்டனர்.

தன்னுடைய வாழ் நாளை எண்ணிக்கொண்டிருந்த இவர், தன்னுடைய மீதி நாட்களை தன்னுடைய தாய் மண்ணில் கழிக்க விரும்பி தமிழகம் திரும்பினார். அப்போது இவருடைய உறவினர்கள் கொல்லி மலை சித்தர் குறித்து கூறி இவரை அங்கு அழைத்தனர். இவருக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை என்றாலும் தன்னுடைய உறவினர்களின் மன திருப்திக்காக கொல்லி மலை சித்தரை சந்திக்க ஒற்றுக்கொண்டார். 

ஆனால் வலியில் துடித்த இவரால் எழுந்து நிற்க, நடக்க முடியவில்லை... உணவும் சாப்பிட முடியவில்லை... ட்ரிப்ஸ் தான் ஏறிய வண்ணம் இருந்தது. உறவினர்கள் இவரை வாகனத்திலும், கொல்லி மலைக்கு தூக்கி கொண்டும் சென்றனர். 

இவரை சிதார் அருகே கொண்டு சென்றதும், அவர் அவருடைய சிறு வயது பெயரான வா சிவா உனக்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறினார். உடலாலும், வலியாலும் துவண்டு போய் இருந்த இவர் திடீர் என அவரை விழித்துப் பார்த்தார். 

தன்னிடம் இவரை விட்டு விட்டு... நீங்கள் ஒரு வாரம் சென்று வாருங்கள் என கூறி உறவினர்களை அனுப்பிவிட்டார். முதல் நாள் ஏதோ சில மூலிகைகளை தண்ணீரில் போட்டு குடிக்க செய்தார். இதை குடித்ததும் அவருக்கு சிறு நீர் கருப்பு நிறத்தில் வெளியேறியது. இரவு சில பச்சலை மூலிகைகள் கொடுத்தார். இரண்டாவது நாளும் இதே போன்ற பொடி தண்ணீர் மற்றும் பச்சலை கொடுக்கப்பட்டது. 

மூன்றாவது நாள் கொல்லி மலை சித்தர், என்ன சிவா இன்று உனக்கு பசிக்கும் இந்த பொடி தண்ணீர் குடித்து விட்டு உணவு அருந்து என்று கூறியுள்ளார். இந்த மனிதருக்கோ ஆச்சர்யம் இத்தனை நாள் பசியே இல்லாமல் இருந்த இவருக்கு பல நாள் சென்று பசி எடுத்தது. உணவு உண்டார், பல நாள் சென்று மலம் கழித்தார். 

மெதுவாக இவருடைய உடல் நலம் தெரியது ஒரு வாரம் சென்று இவரை பார்க்கவந்த உறவினர்களுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. கொல்லி மலை சித்தர் இனி உன் உடலுக்கு ஒன்றும் இல்லை என்று கூறி ஒரு வாரம் கழித்து உறவினர்களுடன் அனுப்பிவைத்தார்.

இவர் உடல் தேறி மீண்டும் அமெரிக்காவுக்கு பறந்தார். இவரை பரிசோதனை செய்த அமெரிக்க மருத்துவர்களுக்கோ ஆச்சர்யம் ரிப்போட்டில் ஒன்றும் இல்லை என வந்தது. 

உடனே அமெரிக்க மருத்துவர்கள் அந்த கொல்லி மலை சித்தர் என்ன மருந்து கொடுக்கிறார் என்பதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறி இவரை தூது அனுப்பினர். இவரும் கொல்லி மலைக்கு சென்று சித்தர்களை சந்தித்து பேசினார். ஆனால் கொல்லி மலை சித்தர் சிரித்துக் கொண்டு அந்த வெள்ளையர்களுக்கு சொல்லி கொடுத்தால் அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பார்கள்... உனக்கு சொல்லி தருகிறேன் நீ இங்கு வரும் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவம் பார் என கூறினார். இதனை ஏற்றுக்கொண்டு சிவா என்கிற பெயரில் கொல்லி மலையிலேயே மருத்துவம் பார்த்தார் இவர்.