சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் கடந்த 15 ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழ்ந்த நிலையில் நேற்று மாலை பார்த்திபன் என்பவரும், இன்று அதிகாலை இளையராஜா என்பவரும் பரிதாபமாக உயிழிந்தனர்.ங

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் என்பவர் தீயில் கருகி பலியானார். மேலும் இந்த தீ விபத்தில் 6 போலீசார் உள்பட 48-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன்  என்பவரும், இளையராஜா என்பவரும் நேற்று  சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதனால் கொடுங்கையூர் தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.