தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்நிய செலாவணி மோசடி புகாரில் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கோ.சி. மணி, திமுக ஆட்சியின்போது உள்ளாட்சி, விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரின் மகன் அன்பழகன்.

இவர் மீது லியாகத் அலிகான் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட லியாகத் அலிகான் இந்த புகாரை அளித்திருந்தார். இதன் பேரில், அமலாக்கத்துறை அன்பழகனை கைது செய்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில், மறைந்த கோ.சி. மணியின் மகன் அன்பழகனை சென்னையில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர்.