Asianet News TamilAsianet News Tamil

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா.. விழா கோலம் பூண்ட தஞ்சாவூர்..

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலாமாக தொடங்கியது. இதனால் தஞ்சாவூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 
 

King Raja Raja Cholan 1037 th Sathaya vila in Periya Kovil Thanjavur
Author
First Published Nov 2, 2022, 10:38 AM IST
 

கிபி 985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ராஜராஜசோழனுக்கு முடிசூட்டப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் சதய விழா கொண்டாடப்படுகிறது.1037வது சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவில், ராஜராஜ சோழன் சிலை ஆகியவை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த விழா இன்றும் நாளையும் நடைபெறும். தற்போது பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க:சென்னையில் கன மழை..! நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரி..! திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்கள்

இந்நிலையில், ராஜராஜசோழனின் 1,037வது சதய விழாவை முன்னிட்டு அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவிலில் தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஓதுவார்களில் வீதி உலா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் மகா தீபாராதனையும் இரவு வீதிஉலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios