சென்னையில் கன மழை..! நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரி..! திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்கள்
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கன் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் இன்று 100 கடி அடி நீரை திறக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கன மழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இது வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. செங்குன்றத்தில் மிக கனமழையாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதே போல செம்பரம்பாக்கம் ஏரியும் நீரின் வரத்தும் அதிகரித்துள்ளது. எனவே வரும் நாட்களில் மழையானது தீவிரம் அடையும் என எதிர்பார்ப்பதால் ஏரிகளில் இருந்து தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களின் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம் இதோ..!
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 20.64 அடியில் நீர் உள்ளது. தற்போது 1ஆயிரத்து 180 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ளதாலும் , ஒரே நாளில் 89 மில்லியன் கன அடி நீரானது உயர்ந்துள்ளதாலும் இன்று (2-11-22)மதியம் 3 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நூறு கன அடி நீர் வெளியேற்றப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதே போல 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2536 மில்லியன் கனஅடியாக உள்ளது புழல் ஏரியும் முழு கொள்ளளவை எட்டும் நிலை இருப்பதால் இன்று மதியல் 100 கன அடி திறக்க வுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புழல் ஏரி திறப்பு
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதால் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொது முதல் கட்டமாக 100 கன அடி நீரானது திறந்துவிடப்படவுள்ளது. நீரின் வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவானது படிப்படியாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!