சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு, நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மானியம் முழுவதையும் ரத்து செய் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், தமிழக அரசு ரேஷன் கடைகளை நிறுத்தும் விதமாக ஓர் அரசாணையை வெளியிட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ரேஷன் கட்டு, காஸ் கட்டு, பவர் கட்டு, தண்ணீர் கட்டு, மக்களைக் கட்டுக்கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டுக் கட்டா கட்டுறாங்க. விளங்கும், இம்சை அரசன் என்றும், மற்றொரு பதிவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் சலுகைகளைக் குறைப்பதற்குப் பதிலாக, எதற்காக ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தையும் அடிக்கிறீர்கள்? என்றும் கூறியுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.