Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி மறைவுக்கு கரூர் மாவட்ட தி.மு.க தொண்டர்கள் என்னவெல்லாம் செய்திருக்காங்க பாருங்க...

கருணாநிதியின் மறைவையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க.வினர் மௌன ஊர்வலம், மொட்டை அடித்தல் போன்றவற்றை செய்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 

karur district DMK volunteers have done this for Karunanidhi death

கடந்த 7-ஆம் தேதி மாலை 6.10-க்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார். இவரின் மறைவையொட்டி அன்று மாலையில் இருந்தே டீ கடை முதல் பெரிய பெரிய துணிக் கடைகள் வரை மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் மறைந்த கருணாநிதியை காண சென்னை இராஜாஜி அரங்கில் கூடினர்.

karunanidhi death க்கான பட முடிவு

அந்தந்த மாவட்டங்களிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்ட தி.மு.க.வினர், தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க கரூரிலுள்ள அறிவாலயத்தில் தி.மு.க. கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர்.

நேற்று  மாலை சென்னையில் இராஜாஜி அரங்கில் இருந்து கருணாநிதியின் உடல் ஊர்வலமாக மெரினா நோக்கி சென்றது. அதேபோன்று கரூரில், தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு மௌன ஊர்வலம் சென்றனர். 

karunanidhi death க்கான பட முடிவு

இந்த ஊர்வலம் ஜவஹர்பஜாரில் இருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம் வழியாக கரூர் பேருந்து நிலையம் வந்தனர். அங்கிருந்து அண்ணா சிலையை அடைந்தனர். பின்னர், அங்கிருந்து கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, "அண்ணாவின் வழியின் கருணாநிதி கழகத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மக்கள் பணியாற்றியது போல தி.மு.க. கழக உடன்பிறப்புகளும் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பணியாற்றுவோம்" என்று உறுதி எடுத்துக் கொண்டனர். 

karunanidhi death க்கான பட முடிவு

பின்னர், சென்னையில் 7 மணியளவில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முன்பு மொட்டை அடித்துக் கொண்டனர். மொட்டை அடிக்கும்போது தலைவர் கருணாநிதி வாழ்க என்று முழக்கமிட்டபடி கதறி அழுதனர். தி.மு.கவை சேர்ந்த பெண்கள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முன்பாக கூடி ஒப்பாரி வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios