கருணாநிதி மூத்த மகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..

கருணாநிதியின் மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Karunanidhis eldest son MK Muthu admitted to hospital due to ill health..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் அவரின் மூத்த மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர் மு.க முத்து. இவர் எம்.ஜி.ஆருக்கு எதிராக திரையுலகில் களமிறங்கினார். பிள்ளையோ பிள்ளை, போக்கிரி, சமையல்காரன், பூக்காரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். எனினும் திரையுலகில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அவர் தீவிர அரசியலிலும் ஈடுபடாமல் இருந்தார். மேலும் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனித்து வசித்து வந்தார்.

இதனிடையே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதுஅவரை சந்தித்த மு.க முத்து, தனது வறுமை நிலை பற்றி எடுத்துக்கூறினார். அவருக்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஜெயலலிதா உதவினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. சில காலமாக மு.க முத்து எங்கே இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு மு.க முத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றூ நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்  குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வரும் மு.க முத்துவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சைகள வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மு.க முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மணிப்பூர் குறித்து சர்ச்சை கருத்து.. பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios