பிரபல பதிப்பாளரும், அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் விமர்சகரும், பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி, அவ்வப்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் மணிப்பூர் கலவரம் தொடர்பான பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

“அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் பத்ரி சேஷாத்ரி. இந்த நிலையில் இன்று பத்ரி சேஷாத்ரி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

அவரின் கைது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று, கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி உள்ளது ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது தான் தமிழக போலீசாரின் பணியா” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

Scroll to load tweet…

கருணாநிதி மூத்த மகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..