திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள அவருக்கு கடிதம் எழுதிய சிறுமி மிராக்லின் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். பிறகு பேட்டியளித்த சிறுமி தாத்தா கருணாநிதி மீண்டு வந்து அரசியல் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது உடல்நிலை மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன் என்று சிறுமி தெரிவித்தார். முன்னதாக வயது முதிர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த வருடமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ம் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் மருத்துவமனை முன் குவிந்து, அவர் நலம் பெற பல்வேறு பிராத்தனைகள் செய்தனர். அதேபோல் எழுந்து வா தலைவா, மீண்டு வா தலைவா" என கோஷம் எழுப்பினர். 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சிறுமி மிராக்லின் நீங்க நல்லா இருக்கீங்களா தாத்தா... என கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும். அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கேள்விப்பட்டபோது எனக்கு அழுகையாக வந்தது. உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை செய்தேன் என்றார்.
  
தற்போது நலமாக இருக்கிறீர்கள் என்று, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் உள்ளது என்றார். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்த சிறுமி மிராக்லின் அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார். அவரது உடல்நிலை மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன் என்று பேட்டியளித்தார்.