திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று காவிரி மருத்துவமனையில் இருந்து கறுப்பு பூனைப்படை கோபாலபுரம் திரும்பியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவமனையில் இருந்து ராஜாத்தியம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் புறப்பட்ட நிலையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் கறுப்பு பூனைப்படையும் வெளியேறியுள்ளது. 

இந்நிலையில் காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆனால் மருத்துவமனையில் சுற்றிலும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஆனாலும் மருத்துவமனை தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உடல்நிலையில் பின்னடைவு என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், மருத்துவ உபகரணங்கள் உதவியோடும், மருத்துவ நிபுணர்கள் உதவியோடு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆ.ராஜா தரப்பிலும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் சீராக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆகையால் தொண்டர்கள் கலைந்து செல்லும் படியும் அறிவுறுத்தினார். அறிக்கை வெளியான சில நிமிடங்களில் மருத்துவமனையை விட்டு குடும்ப உறுப்பினர் என ஒவ்வொருவராக வெளியேறியதை அடுத்து கறுப்பு பூனைப்படையும் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.