மதுபோதை நபர்களுக்கு ‘ஷாக்’… கன்னியாகுமரி கலெக்டரின் ஸ்டிரிக்ட் உத்தரவு
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் கிடைக்கும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.
கன்னியாகுமரி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் கிடைக்கும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போட்டு கொள்ளும் வேகமாக முன் எடுக்கப்பட்டு உள்ளன. வாரம் தோறும் தமிழகம் முழுவதும் ஞாயிறன்று தமிழக அரசு கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடத்தி வருகிறது.
அனைத்து மாவட்டங்களில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக முன் எடுக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அதிரடி உத்தரவிட்டு உள்ளார். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே இனி மதுபானம் கிடைக்கும் என்று அவர் அறிவித்துள்ளது குடிமகன்களை கலக்கத்தில் விட்டுள்ளது.
பெரும்பாலும் கொரோனா தடுப்பூசி எடுக்காதவர்கள் மதுபானம் அருந்துபவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக சரக்கடித்தால் கொரோனா செத்துவிடும் என்ற அறியாமையால் பல குடிமகன்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் அலட்டும் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆகையால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஆக்க வேண்டும் என்று நடவடிக்கையாக ஒருபுறமும், குடிமகன்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவால் குடிமகன்கள் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.