காஞ்சிபுரம் மாவட்டம் சின்னப்பன்சத்திரம் அருகே லாரியும் காரும் மோதி விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் பைசல், ஜாவித், ரைஸ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் ஜாவித். கல்லூரி மாணவர் இவரது நண்பர்கள் பைசல், ரைஸ் உள்பட 6 பேர் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். காரை பைசல் ஓட்டிச் சென்றார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுக்கொண்டிருந்த போது சின்னப்பன்சத்திரம் அருகே பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. 

இதனால் கார் தறிகெட்டு ஓடி சென்டர்மீயாவில் மோதி எதிர் திசையில் சென்றது. அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பைசல், ஜாவித், ரைஸ் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆசிப், யாகூப், இம்தியாஸ், முகமது யாசிப், இன்ஷார் இர்பான், இன்ஷா ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மனுப்பி வைத்தனர்.