Annamalai: அண்ணாமலைக்கு ரபேல் வாட்சை பரிசளித்ததே இவர்தான்; புதிய தகவலை வெளியிட்ட கல்யாணராமன்!!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டியிருந்த ரபேல் வாட்ச் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த வாட்சை அண்ணாமலைக்கு யார் கொடுத்தார்கள். ஏன் கொடுத்தார்கள் என பாஜக முன்னாள் நிர்வாகி கல்யாணராமன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலையின் ரபேல் வாட்ச்
தமிழகத்தில் பாஜக- திமுக இடையே உச்சக்கட்ட மோதல் நீடித்து வந்தது. அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வந்தது.அந்த சமயத்தில் செந்தில் பாலாஜி தனது கையில் கட்டியிருந்த ரபேல் வாட்ச் தொடர்பாக செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். இதற்கு அண்ணாமலையால் ரபேல் வாட்சிற்கான பில்லை கொடுக்க முடியவில்லை. ஒரு சில மாதங்களுக்கு பிறகு இந்த வாட்ச் தனது நண்பரிடம் இருந்து வாங்கியதாகவும் அதற்காக அவருக்கு பணம் கொடுத்தாக பில் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனால் இந்த சர்ச்சை அப்போது ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்தால் அக்கட்சியின் மூத்த நிர்வாகி கல்யாணராமன் பாஜகவில் இருந்து ஓராண்டிற்கு நீக்கப்பட்டார். இந்தநிலையில், கல்யாணராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அந்த Rafale 6 லட்சம் வாட்ச் 17-18 ADMK /TTV Group எம் எல் ஏக்களை கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தனது உறவினராகிய அண்ணாமலை வைத்து நன்றாக கவனித்துக் கொண்டதற்காக செந்தில் பாலாஜியால் 2017ல் சுயமாக வழங்கப்பட்ட வெகுமதி . அதனால தான் அந்த ஆளுக்கு அண்ணாமலையிடம் வாட்ச்சின் பில் இல்லை என்பதும் தெரியும். அதை தரமுடியாது என்பதும் தெரியும்.
கொடுத்தவனே கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தயங்கிய அண்ணாமலை அடுத்தவன் கட்டி இருந்த வாட்ச்சை விலை கொடுத்து வாங்கியதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பதில் சொல்ல 100 நாட்கள் ஆனதன் ரகசியம் இதுதான். மொத்தத்தில் நான் ஒரு கிளீன் ஆபிசர் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தது எல்லாம் பொய்.
(பொதுவாக எந்த மடையனும் 2016ல் விற்று தீர்ந்துவிட்ட ஒரு வாட்ச்சை தேடி, அதை 2021ல் அதுவும் உடலுடன் ஒட்டி உறவாடும் ஒரு பொருளை second hand பொருளாக வாங்கமாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும். தான் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் முட்டாளுக்குத் தெரியாது) என கல்யாண ராமன் தனது பதிவில் கூறியுள்ளார்.