கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக வாட்ஸ்அப் குழு அட்மின்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக வாட்ஸ்அப் குழு அட்மின்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சியில் கடந்த 13ம் தேதி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவிக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் சைபர் கிரைம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி வன்முறை.. கெத்துக்கு வீடியோ எடுத்து ஸ்டேடஸ் வைத்த கலவரக் கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்

கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மட்டுமல்லாது சென்னை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவி மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக சிலரை கைது செய்துள்ளனர். மேலும் கலவரத்துக்குப் பிறகும் மாணவி மரணம் குறித்து வதந்தி பரப்பிய நபர்களின் விவரங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளன.

அந்த விவரங்கள் கையில் கிடைத்தவுடன் கைது நடவடிக்கை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் சேனல்கள், 31 டுவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- காதலை ஏற்காத மாணவி.. வாயில் விஷத்தை ஊற்றிய காதலன் - மீண்டும் சூடுபிடித்த வழக்கு !

இந்நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக வாட்ஸ்அப் குழு அட்மின்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கராபுரம் புது பல்லகச்சேரி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன், கச்சாகுடியை சேர்ந்த அய்யனார், வேப்பூரை சேர்ந்த விஜய், மட்டபாறையை சேர்ந்த துரைப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது வாட்ஸ்அப் குழு அமைத்து கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.