அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியை, கட்சி கொடியை மறந்துவிட்டு மக்களை ஏமாற்றுவதாக தவெக தலைவர் தளபதி விஜய் திமுகவை விமர்சித்து பேசி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக தற்போது அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேசி வருகிறார். கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.

சேலத்தில் பிரசாரம் செய்ய தவெகவினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில், சேலத்துக்கு முன்பாக விஜய் இன்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரத்துக்கும், நமக்கும் சம்பந்தம் உண்டு. ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிந்து பரந்தூர் மக்களை சந்தித்து கள வேட்டையை தொடங்கியது காஞ்சிபுரம் தான். அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்பதை மறந்துவிட்டு மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.