திரைப்படங்களுக்கு 30% வரி விலக்கு அளித்ததனின் பண மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை , தமிழை வளர்ப்பதற்காக அளிக்கப்படுவதாக கூறப்படும் அந்த பணம் தயாரிப்பாளருக்கு போய் சேர்கிறது மக்களுக்கும் பயனில்லாத அந்த அரசாணையை வாபஸ் பெறலாமே என்று நீதிபதி கேட்டுள்ளார்.

சவாரி திரைப்படத்துக்கு U சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.அதில் பல வெளிநாடுகளில் A சான்றிதழ் வழங்கப்பட்ட கபாலி திரைப்படத.துக்கு இந்தியாவில் U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் சைக்கோ கதாப்பாத்திரம் உள்ளதால் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் 2006 முதல் வரி விலக்கு வழங்கப்பட்ட திரைப்படங்களின் விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்தார். 

அதில் 2012 படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி, கேளிக்கை வரி விலக்களிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் வளர்க்க என்ன செய்தன ? எனவும் கேட்டிருந்தார். 

 மேலும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்களிப்பதால் தயாரிப்பாளர் மட்டுமே பயனடைகிறார் என்றும், மக்கள் மற்றும் அரசாங்கம் என்ன பயன் பெற்றன ? என்றும் கேட்டிருந்தார். 

இதனையடுத்து கேளிக்கை வரி விலக்கு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது , மேலும் வரி விலக்கு வழங்கப்பட்ட படங்கள் தமிழ் வளர்ச்சிக்காக எந்த வகையில். உதவியது என்பதை அறிக்கயாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு,

மேலும் 2006 முதல் 2016 வரை படங்களுக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரி விலக்கு அளித்ததனின் பண மதிப்பு எவ்வளவு என்பதை தாக்கல் செய்ய வணிக வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வரிவிலக்கு அளித்த தொகை பற்றி சரியான தகவல் இல்லை என்று தெரிவித்தனர். 

30% கேளிக்கை வரி விலக்கு அளித்தாலும், சலுகை மக்களுக்கு போகவில்லை, மாறாக டிக்கெட்டுக்கு முழு தொகை வசூலிக்கப்படுகிறது ,

அந்த தொகை முழுமையாக ஒருவருக்கு போகின்றது, அதை அரசு வேடிக்கை பார்க்கிறது. கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு கொடுப்பதில் தவறில்லை. மக்களும் அப்படத்தை வரவேற்பார்கள். சமீபத்தில் வந்த ஜோக்கர் நல்லப்படம். மக்கள் மிகுந்த வரவேற்பு. எனக்கும் கொஞ்சம் சினிமா ஞானம் உள்ளது.

ஆனால் வரிவிலக்கு கொடுக்கப்பட்ட பல படங்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து மக்களின் பணம்தான் ஏமாற்றப்படுகிறது.

தமிழை வளர்க்காமல் வளர்ச்சி என்ற பெயரில் சினிமாவுக்கு வரிவிலக்கு அளிக்கும் அரசாணையை திரும்பப்பெற்றுக்கொள்ளலாமே என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.