Asianet News TamilAsianet News Tamil

ADMK : அதிமுகவினருக்கு காலையிலேயே ஷாக் தகவல்.! மாஜி அமைச்சரை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவு

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரபதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் நேற்று கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

Judge orders former AIADMK minister MR Vijayabaskar to be jailed till 31st KAK
Author
First Published Jul 17, 2024, 7:24 AM IST | Last Updated Jul 17, 2024, 7:24 AM IST

நில மோசடி புகார்

100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும்,  மேலும்   தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்டம்  சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்திருந்தார். 

Judge orders former AIADMK minister MR Vijayabaskar to be jailed till 31st KAK

தலைமறைவான மாஜி அமைச்சர்

இந்த புகாரின் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இதனால் முன் ஜாமின்  கோரி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தி்ல் விஜயபாஸ்கர் இரண்டு முறை முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து தலைமறைவான விஜயபாஸ்கரை கைது செய்த தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடிவந்தனர். நேற்று காலை கேரளா மாநிலம் திருச்சூரில் வைத்து போலீசார் விஜயபாஸ்கரை கைது செய்தனர்.  நேற்று மதியம் கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட விஜயபாஸ்கரிடம் சுமார்  7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. 

Judge orders former AIADMK minister MR Vijayabaskar to be jailed till 31st KAK

31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

இதனை தொடர்ந்து கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜயபாஸ்கர் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டதையடுத்து கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விஜயபாஸ்கர் நள்ளிரவு 2 மணியளவில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிபதி முன்பு நீண்ட நேரம் நடைபெற்ற விசாரணையில் விஜயபாஸ்கரை வருகிற 31ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அடைக்கப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர் , இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் வழக்கும் எனவும். இதனை நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக சந்திப்பேன் என தெரிவித்தார்.  

Breaking News : கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios