Breaking News : கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது
100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரபதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தநிலையில், இன்று காலை கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நில மோசடி வழக்கு
100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்டம் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்திருந்தார்.
தலைமறைவான விஜயபாஸ்கர்
இந்த புகாரின் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது இதனால் முன் ஜாமின் கோரி விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஜாமின் மனுவை நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.இதனையடுத்து விஜயபாஸ்கரை கைது செய்த தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடிவந்தனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.
கேரளாவில் விஜயபாஸ்கர் கைது
இந்த நிலையில் இன்று காலை கேரளாவில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்திருந்தனர். கேரளாவில் கைது செய்யப்பட்டவரை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர் செய்யப்பட்டப்பட்ட பின்னர் கரூர் பகுதிக்கு அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Nainar Nagendran: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் ஆஜர்