ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன், இளம் பெண் ஒருவர் தன்னுடைய கணவனின் பெண் தோழியிடம் கோபத்தில் உரையாடும் ஆடியோவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சென்னையை அடுத்த, ஆவடியைச் சேர்ந்தவர் முரளி. இவரின் மகன் ரோஸ். இவருக்கும் ஜீவிதா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ரோஸ், வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவிதா இது குறித்து கணவர் ரோசிடம்
கேட்டுள்ளார். ஆனால், அவரது மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்ட சிலர் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஜீவீதா தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஜீவிதாவின் பெற்றோர்கள், ரோசின் பெற்றோர்கள் உள்பட சமாதானம் பேசி வைத்துள்ளனர். ஆனாலும், ரோஸ்-ன் வேறொரு பெண்ணுடனான தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார். இது குறித்து ஜீவிதா மீண்டும், ரோசிடம் கேட்டுள்ளார். ஆனால் ரோஸ், ஜீவிதாவை
கடுமையான சொற்களால் திட்டியதாக தெரிகிறது.  இதில் மனமுடைந்த ஜீவிதா, தற்கொலை செய்து கொள்ள மின்சார ரயிலில் ஏறியுள்ளார். ரயில் சென்னை, அடையாறு பாலம் அருகே வந்தபோது, ஜீவிதா, பாலத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார். 

ஜீவிதாவின் கணவர் குடும்பத்தார் மீது, அவரது தாயார் போலீசில் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜீவிதாவின் கணவர் ரோசை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஜீவிதாவின் அம்மா கொடுத்த புகாரின் பேரில் ரோசுடன் பணியாற்றும் பெண்ணுக்கும் நட்பு இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.  ஜீவிதா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, அந்த பெண்ணுடன் போனில் பேசியுள்ளார். அந்த பெண்ணிடம் ஜீவிதா கடும் கோபத்தில் பேசியுள்ளார். ஜீவிதாவின் கேள்விகளுக்கு ரோசின் தோழி மழுப்பபலாக பதிலளித்து வருகிறார்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ஜீவிதாவுக்கு ரோஸின் பெண் தோழி குறித்த விவரம் தெரிந்துள்ளது. இதனால், அவரிடம் போனில் பேசியுள்ளார். அப்போது, என்னுடைய கணவருடன் கடந்த சண்டே எங்கு சென்றாய் என்று கேட்கிறார் ஜீவிதா. அதற்கு ரோஸின் பெண் தோழியால் பதிலளிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து, 'நீங்கள் இருவரும் நண்பர்களாகப் பழகினாலும் எனக்கு அது பிடிக்கவில்லை. ஏனெனில், என் கணவர் என்னுடனும் என் குழந்தையுடனும் பேசுவதில்லை. 

ஆனால், நீங்கள் இரவு 11 மணிக்கு மேல் என் கணவருடன் போனில் பேசுகிறீர்கள், அவருடன் வெளியில் செல்கிறீர்கள் என்று ஜீவிதா ஆவேசமாக கேட்க... அதற்கு, என் பாய் பிரண்ட்ஸ்களுடன் செல்வதைப் போலத்தான் அவருடனும் செல்கிறேன்' என்று அந்தப்பெண் பதிலளிக்கிறார். 'என்னைப்போன்ற நிலைமை உங்களுக்கு நடந்தால் என்று
சொல்வதற்குள் அந்தப்பெண், அப்படியெல்லாம்  பேசாதீர்கள் என்று பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்களின் உரையாடல் தொடர்கிறது. அதன்பிறகுதான் ஜீவிதா தற்கொலை செய்துள்ளார். ஜீவிதா தற்கொலை சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரோசுடன் பணியாற்றும் பெண்ணுடன் ஜீவிதா பேசும் முன்பு அவருடைய கணவரின் போனிலும் தொடர்பி கொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடலையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.