கன்னியாகுமரியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி ஆட்சியர் அறிக்கை அளிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அருகே வடசேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் சிற்பம் கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் இந்த மணல் சிற்பம் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி, மகேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மகேஷின் மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும்,இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.