முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுவின் உடல்நிலையில் கடும் பின்னிலை ஏற்பட்டதால், தமிழக அரசு சூழ்நிலையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
முதலமைச்சர் ஜெயல்லிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் எனப்படும் இதய வால்வு முடக்கம் ஏற்பட்டதால், மிகவும் இக்கட்டான சூழ்நலை ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பெரும் கலக்கத்துக்கும் கவலைக்கும் ஆளாகியுள்ளனர்.
சோகம் தோய்ந்த முகத்தோடு, கண்ணிரும் கம்பலையுமாக தங்கள் தலைவி திரும்ப வந்துவிடுவார் என நம்பிக்கையோடு, பிரார்த்தனை செய்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேர் தலைமையில் முதலமைச்சர் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் செய்ய வேண்டிய வேலைகள குறித்து அல்லது அடுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்கள் கூட்ட்ம் தொடங்கி நடைபெறுகிறது.

இந்த ‘கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையின் அண்டர் கிரவுண்டில் உள்ள ஆடிட்டோரியத்தில் தொடங்கி நடைபெற்றது. அங்கு ஒ.பன்னீர்செல்வம் முதல் சமீபத்தில் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி வரை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொறுப்பு முதல்வரை தேர்ந்தெடுப்பதா..? அல்லது இப்படியே தொடர்வதா...? என்பது குறித்த முக்கிய முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது.
