jayakumar accepted that economy of TN is in critical stage

தமிழக விவசாயிகளின் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க முடியாத அளவுக்கு அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது என நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் தமிழக வணிகர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

எனவே வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டார்.

எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும்இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் அணியின் விருப்பம் என்றும் ஆனால் பேச்சு ஓபிஎஸ் ஏன் கலைத்தார் என்று தெரியவில்லை என ஜெயகுமார் கூறினார்.

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை எப்போது தரப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என கூறினார்.

தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாக, அமைச்சர் ஜெயகுமார் ஒப்புக் கொண்டார். தமிழக அரசின் நிலையை புரிந்து கொண்டு விவசாயிகள் செயல்பட வேண்டம் என்றும் ஜெயகுமார் கேட்டுக்கொண்டார்.