jan 25 th leave for all tasmac in tamil nadu
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம், அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும்,
மற்ற 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25- ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும்,இந்த போரட்டத்திற்கு மற்ற சங்கங்களிடமிருந்து ஆதரவு கேட்பத உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
