Jamabandi on 15th day of Ariyalur Collector call for people to get an immediate solution to their demands ...

அரியலூர் 

அரியலூர் மாவட்டத்தில் வருகிற 15-ஆம் தேதி நடக்க இருக்கும் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்களை அளித்து உடனடி தீர்வு காண மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று ஆட்சியர் விஜயலட்சுமி.

அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி வருகிற 15-ஆம் தேதி நடக்கிறது. 

அதன்படி அரியலூர் வட்டத்திற்கான ஜமாபந்தி அரியலூர் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை தாங்குகிறார். 

இதில் அரியலூர் உள்தாலுகாவிற்கு உட்பட்ட பொட்டவெளி, இலுப்பையூர், ராயபுரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமினாபாத் (ஐந்து துண்டுகள்), அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறும்.

ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். 

இதில் ஆண்டிமடம் உள்வட்டத்திற்குட்பட்ட ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை (வடபாகம்), விளந்தை (தென்பாகம்), வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், அணிக்குதிச்சான் (வடபாகம்), அணிக்குதிச்சான் (தென்பாகம்) ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறும்.

உடையார்பாளையம் தாலுகா ஜமாபந்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. 

இதில் தா.பழூர் உள் தாலுகாவிற்கு உட்பட்ட இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக் குறிச்சி, தென்கச்சிபெருமாள் நத்தம், தா.பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், 

இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்த நல்லூர் உள்பட), சோழமாதேவி, கோடாலிக்கருப்பூர், வேம்புகுடி ஆகிய பகுதிகளுக்கு நடைபெறும்.

செந்துறை தாலுகாவில் நடைபெறும் ஜமாபந்திக்கு அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமை தாங்குகிறார். இதில் செந்துறை உள் தாலுகாவிற்கு உட்பட்ட ஆனந்தவாடி, உஞ்சினி, மருவத்தூர், பெரியாக்குறிச்சி, வஞ்சினபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறும். 

எனவே, மக்கள் இந்த ஜமாபந்திகளில் பட்டாமாறுதல், பெயர் மாறுதல், நிலஅளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடி தீர்வு காணலாம்" என்று அவர் அதில் கூறியுள்ளார்.