கோவையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது எனவும் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் என கோவை கார் குண்டு வெடிப்பு நடைபெற்ற கோயிலில் பார்வையிட்ட பின்னர்  ஜமாத் கூட்டமைப்பினர் உறுதிபட தெரிவித்துள்ளனர். 

கோவை கார் வெடி விபத்து

கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோவில் முன்பாக கடந்த 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் அந்த கார் அருகே ஆணி, பால்ராஸ் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த நபரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது வெடி பொருட்களுக்கு தேவையான மருந்துகள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் திட்ட மிட்ட சதி என தெரியவந்ததையடுத்து 6 பேரை கைது செய்த போலீசார் உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கோயிலில் ஜமாத் அமைப்பு

இதனையடுத்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள பிளவுகளை தீர்க்கும் வகையில் மத நல்லிணக்க கூட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக கார் விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயிலுக்கு உக்கடம் பகுதியில் உள்ள மூன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் இன்று காலை வந்தனர். கோவை அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இனாயத்துல்லா தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் சங்கமேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்த போது கோயில் செயல் அலுவலர் மற்றும் கோவில் பூசாரி ஜமாத் அமைப்பினருக்கு அங்க வஸ்திரம் அணிவித்து வரவேற்றனர்.

மதவெறியை கிளப்ப திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்..! பேரணிக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

வன்முறை இஸ்லாம் ஏற்காது

கோயில் வளாகத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையானது நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இனாயத்துல்லா, நூற்றாண்டு பழமை வாய்ந்த மூன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மத நல்லிணக்க அடிப்படையில் திருக்கோவிலுக்கு வருகை புரிந்ததாகவும் கோவில் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தை ஜமாத் அமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் வன்முறையை ஒருபோதும் இஸ்லாம் ஏற்காது என தெரிவித்தார். 

கோவை கார் வெடி விபத்து..! கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள்..! வரவேற்ற பூசாரிகள்

இந்து,முஸ்லிம்- அண்ணன் தம்பி

கோட்டைமேடு பகுதியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருவதாகவும் தங்களை மத பூசலுக்கும், அரசியலுக்கும் உட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த திருக்கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். பயங்கரவாதத்திற்கு ஜமாத் அமைப்பினர் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் என கூறினார். இந்து- முஸ்லிம் ஒற்றுமையை கோவையில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது எனவும் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழா நடக்கும் பொழுது இஸ்லாமியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததை நினைவு கூற வேண்டும் எனவும் இனையத்துல்லா அப்போது தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! மத கலவரத்தை தூண்டும் பதிவு..! கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு