Asianet News TamilAsianet News Tamil

கோவை கார் வெடி விபத்து..! கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள்..! வரவேற்ற பூசாரிகள்

கோவை கார் வெடி விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்கடம் பகுதியில் அமைந்துள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் வருகை தந்து கோயில் நிர்வாகிகளிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர்.

The Jamaat organization personally visited the temple in the area where the Coimbatore car blast took place
Author
First Published Nov 3, 2022, 12:43 PM IST

கோவையில் கார் வெடி விபத்து

கோவையில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலையில் உக்கடம் பகுதியில் உள்ள கோயில் முன்பாக கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிர் இழந்தார். அவரை வீட்டை சோதனை செய்த போது வெடி பொருட்களுக்கு தேவையான வேதி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்த போலீசார் உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தமிழக அரசு என்ஐஏக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்த கார் வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்படும் நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மதவெறியை கிளப்ப திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்..! பேரணிக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

The Jamaat organization personally visited the temple in the area where the Coimbatore car blast took place

கோயிலில் இஸ்லாம் ஜமாத் அமைப்பு

இந்தநிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியை ஒட்டிய கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு அனைத்து ஜாமஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் வருகை தந்தனர். ஜமாஅத் நிர்வாகிகளை கோயில் பூசாரிகள் வணக்கம் வரவேற்றனர். இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள அறையில் கோயில் நிர்வாகிகளோடு ஜமாத் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். மேலும் கார் வெடி விபத்து சம்பவத்திற்கு தங்களது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டனர். 

இதையும் படியுங்கள்

ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி பங்கேற்பு..! செண்டை மேளம் வாசித்து உற்சாகம்

Follow Us:
Download App:
  • android
  • ios