ஸ்பெயின் நாட்டுடன், இந்தியாவை ஒப்பிட்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையொட்டி கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தப்பட்டள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என பல்வேறு சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் மத்திய மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஒரு பத்திரிகை மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது. அது ஏறுதழுவுதல் என்ற வார்த்தையில் இருந்து உருவானது. ஸ்பெயின் நாட்டில் காளைகளை வைத்து சண்டை நடத்துகிறார்கள். இதற்காக டிக்கெட் கொடுத்து பணம் வசூலிக்கிறார்கள். இதுபோன்ற காட்சி தினமும் நடந்து வருகிறது.

ஆனால், தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது தவறு. ஸ்பெயின் நாட்டில் காளையை சித்திரவதை செய்கின்றனர். பின்னர், அதில் அந்த மிருகம் கொல்லப்படவும் செய்கிறது.

 அப்படி ஜல்லிகட்டை தடை செய்தால் முதலில் பிரியாணியை தடை செய்யவேண்டும்.

தமிழகத்தில் காளையை தெய்வமாக வணங்குகின்றனர். இதற்கு தடை விதிக்க கூடாது. ஸ்பெயின் நாட்டில் நடக்கும் காளை சண்டையை, ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.