- Home
- Tamil Nadu News
- தவெக தலைவரை ரவுண்ட் கட்டும் சிபிஐ! விஜயிடம் கேட்க உள்ள சில முக்கிய கேள்விகள் இதுதான்?
தவெக தலைவரை ரவுண்ட் கட்டும் சிபிஐ! விஜயிடம் கேட்க உள்ள சில முக்கிய கேள்விகள் இதுதான்?
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில், அவரிடம் கூட்ட நெரிசலுக்கான காரணம் மற்றும் களச்சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட உள்ளது.

கரூர் துயர சம்பவம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிஜ விசாரணை
கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஜ விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த டிசம்பர் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மற்றும் கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தவெக தலைவர் விஜய்
மேலும் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அதில் சிபிஐ மற்றும் தடவியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரச்சார வாகன ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி விஜய் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் செய்தார். அங்கிருந்து சிபிஐ தலைமையகத்திற்கு சென்று விசாரணைக்கு ஆஜரான தமிழகத்தை சேர்ந்த அதிகாரி உட்பட 4 பேர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
விஜயிடம் கேட்க உள்ள கேள்விகள்
அதில், சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேட்க உள்ள சில முக்கிய கேள்விகள் வெளியாகியுள்ளன. அதாவது 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசல் எப்படி நடந்தது? பரப்புரை நடந்த இடம் குறுகியதாக உள்ளது என்பதையும், எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பது தெரியுமா? என கேள்வி எழுப்ப உள்ளனர்.
காவல்துறை தடியடி நடத்தியது தெரியுமா?
மேலும் பரப்புரை நடந்த இடத்தை தாமதமாக அடைந்ததற்கான காரணம்? குழந்தை காணாமல் போனது என்று அறிவிக்கப்பட்ட போது அங்கிருந்த கள சூழல் குறித்து தெரியுமா? கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது தெரியுமா? பரப்புரை இடத்தில் இருந்து விஜய் வெளியேறியது ஏன்? உள்ளிட்ட கேள்விகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

