ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போதுதான் தீர்ப்பை எழுதிக்கிட்டிருக்றோம்…பொங்கலுக்குள்ள தீர்ப்பு சொல்ல முடியாது அப்படின்னு உச்சநீதிமன்றம் கைவிரித்து விட்டது.

இதனால் தமிழக மக்கள் கொந்தளித்துப்போயுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கல்லுரி மாணவர்கள் இப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளதால் எங்கு பார்த்தாலும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

சென்னை, மதுரை,கோவை என தமிழகத்ததின் பல்வேறு நகரங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

வேலுரில் இன்று நுற்றுக்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் ஒன்று திரண்டு திடீரென போராட்டத்தில் குதித்தனர். ஜல்லிக்கட்டு எங்கள் பாராம்பரிய உரிமை, அதைத் தடுக்க மத்திய அரசே நீ யார்? என அவர்கள் முழக்கமிட்டனர்.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடக்கூடிய நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதனால் உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். வேலுரைச் சேர்ந்த கல்லுரி மாணவ. மாணவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.