சேலம் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய மாணவன் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது
ஜல்லிக்கட்டு ஆதரவாக தொடர்ந்து 4 வது நாளாவது தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று சேலம் ரயில் நிலையத்தில் வந்து ஜல்லிக்கட்டு அனுமதி வழங்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் மீது உயர் மின் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இளைஞர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை வைகை பாலம் உள்ள செல்லூர் என்னும் இடத்திற்கு நாகை நோக்கி சென்ற ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியும் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது
