ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் இளைஞர்களை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை பேருந்துகள் எதுவும் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பீட்டா எதிர்ப்பாக மாறி , பீட்டா அமெரிக்க நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு மறியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக நான்கு நாட்களுக்கும் மேலாக வீட்டுக்கு செல்லாமல் வீதிகளில், வாடிவாசல் முன்பு , மெரினா கடற்கரையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்திற்கு பலமுனை ஆதரவு பெருகி வருகிறது. 20 ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில் நாளை போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ , கால்டாக்சி , வாடகை வேன்கள் இயங்காது என்று அறிவித்திருந்தனர். 

தற்போது மாநில அரசு பேருந்துகளும் இயங்காது என தெரிகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்ணா தொஇழ்ற்சங்கம் தவிர்த்து , சிஐடியூ, தொமுச , ஐஎன்டியூசி, தேமுதிக பேரவை, எச்.எம்.எஸ் உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது.

இதனால் தமிழகம் முழுதும் போக்குவரத்து பேருந்துகள் இயங்காத நிலை ஏற்படும். தமிழகம் முழுதும் 8 மாநகர போக்குவரத்து கழகங்கள் உள்ளன , 24000 பேருந்துகள் இஅய்ங்குகின்றன, சென்னையில் மட்டும் 3500 பேருந்துகள் ஓடுகின்றன, 350 மினி பேருந்துகள் ஓடுகின்றன. 

இவைகளில் பெருமாபாலானவை இயங்காது . கோயம்பேட்டிலிருந்து ஒருநாளைக்கு 700 பேருந்துகள் தமிழகம் முழுதும் செல்கிறது. இதுவும் பாதிக்கப்படும்.